காசாவின் நிலைமை மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் வேண்டுகோளின் பேரில் எகிப்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கும் இறுதியாக இஸ்ரேலுக்கும் அவரது இந்த விஜயம் அமையவுள்ளது.
காசா மீது குண்டுவீசி பொதுமக்களைக் கொல்வதை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை பிரான்ஸ் ஜனாதிபதியும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.