தீபாவளிக்கு வழமையாக சூப்பர் ஹீரோக்களின் படங்கள் வெளியாகி வசூல் சாதனை படைக்கும் . இம்முறை அஜித் , விஜய் , ரஜினி , கமல் என யாருடைய திரைப்படமும் தியேட்டர் வாசலை தட்டவில்லை.
பருத்திவீரனில் அறிமுகமாகி பலரின் மனதை தொட்ட கார்த்தி தனது 25வது படமான ஜப்பானுக்கு பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தார். தனது 25 வது படத்துக்காக விழா எடுக்கப்பட்டாலும் ஜப்பான் திரைப்படம் இந்திய ரீதியில் கூட பெருமளவில் பேசப்படவில்லை .
இந்நிலையில் , ஜப்பானுடன் திரைவார் செய்த திரைப்படம் கார்த்திக் சுப்ராஜ்ஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சத்தமின்றி வெற்றியை வசூலித்து கொண்டு செல்கிறது.
எஸ்.ஜே .சூர்யா , ராகவா லோரன்ஸ் இணைந்து நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் நேற்று வரை 21 கோடிகளை கடந்துள்ளதாக திரைப்பட தயாரிப்பு குழு அறிவித்துள்ளது