மேஷம் : சிந்தனை மேலோங்கி இருக்கும். கற்பனைகளில் மிதப்பீர்கள். நல்ல நல்ல பகல் கனவு கூட வரும். நல்ல ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும். நல்ல சாப்பாடு, நிம்மதியான தூக்கமும் இருக்கும். இந்த ஞாயிற்றுக்கிழமை சுகபோக வாழ்க்கை தான். வராத பணமும் கைக்கு வந்து சேர வாய்ப்புகள் உள்ளது. சந்தோஷமாக இன்று மாலை, குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்வீர்கள்.
ரிஷபம் : தன்னம்பிக்கையும் தைரியமும் உயர்ந்த நிலையில் இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வசூல் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பணத்தேவை உங்களுக்கும் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்க தொடங்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து தொலைபேசியின் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம் : இன்று கூடுதல் கவனம் இருக்க வேண்டும். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஜாக்கிரதியாக இருக்கணும். யாருக்கும் கடன் கொடுக்காதீங்க. கடன் வாங்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புகள் உள்ளது. யாரேனும் ஒருவர் விட்டுக் கொடுத்து செல்லனும். வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் இருக்கணும்.
கடகம் : இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். தந்தை வழி உறவின் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பூர்வீக சொத்து பிரச்சனை ஒரு நல்ல முடிவுக்கு வரும்.ஸஅடகு வைத்த நகையை மீட்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை உயரும். நீண்ட தூர பயணம் வெற்றியைக் கொடுக்கும்.
சிம்மம்: இன்று பாதகமாக சில விஷயங்கள் நடக்கும். அதனால், புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். முக்கியமான முடிவு எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். வியாபாரத்தில் நண்பர்களின் உதவியால், நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த வாக்குவாதம் சரியாகி ஒற்றுமை அதிகரிக்கும்
கன்னி: இன்று மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் விருந்தினர்களின் வருகை இருக்கும். சுப செலவு ஏற்படும். விவசாயிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு லாபம் நிறைந்த நாள் இது. கட்டுமான தொழிலில் இருப்பவர்கள் தொழிலில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும்.;
துலாம்: இன்று வேலை பளு கொஞ்சம் கூடுதலாக இருக்கும். இருந்தாலும் சுறுசுறுப்பாக எல்லா வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு இந்த நாள் இறுதியில் உடல் அசதி இருக்கும். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். உடம்பில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் இருந்த சின்ன சின்ன சிக்கல்கள் கூட சரியாகிவிடும்
விருச்சிகம்: இன்று சுறுசுறுப்பு கொஞ்சம் குறைந்து காணப்படும். சோம்பேறித்தனத்தோடு இருப்பதால் எந்த வேலையும் சரியாக நடக்காது. ஞாயிற்றுக்கிழமை அல்லவா. அதனால் முழு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். எதுவும் பிரச்சனை இல்லை. இன்று முக்கியமான வேலையில் உள்ளவர்கள் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள மனசுக்கு பிடிச்ச பாடல்களை கேட்கலாம்.
தனுசு: இன்று கலைநயம் அதிகமாக இருக்கும். பார்க்கும் பொருட்கள் எல்லாம் அழகாக தெரியும். நீங்கள் உங்களை அழகுப்படுத்திக் கொள்வீர்கள். ஆனால் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். பிள்ளைகளின் போக்கை பாருங்கள். பெற்றவர்களின் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்.
மகரம்: இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வரும். பணக்கஷ்டம் இருக்கும். உடன் வேலை செய்பவர்களால் தொல்லைகள் இருக்கும். உங்களுடைய நல்ல மனதை புரிந்து கொள்ளாமல், உறவினர்கள் கொஞ்சம் கடினமான வார்த்தையில் பேசக்கூட வாய்ப்புகள் உள்ளது. கவலைப்படாதீங்க எல்லாம் இந்த நாள் இறுதியில் சரியாகிவிடும்
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்கக்கூடிய நாளாக இருக்கும். இத்தனை நாள் இருந்த அசதிக்கு இன்று நாள் முழுவதும் தூங்கினாலும் போதாது. பிள்ளைகளால் மனம் மகிழ்ச்சி உண்டு. சில பேருக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சில பேருக்கு சம்பளமே வந்து இருக்காது. இந்த சூழ்நிலையை சமாளிப்பதில் சிரமம் ஏற்படும்.
மீனம்: கொஞ்சம் பொறுமை தேவை. முன்கோப் பட வேண்டாம். உறவினர்களிடம் பேசும் போதும் மேலதிகாரிகளிடம் பேசும்போதும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். வார்த்தையில் கவனம் இருக்க வேண்டும். வீணாக பேசினால் வாக்குவாதம், கைகலப்பு வரை போய்விடும். ஜாக்கிரதை, வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. வாகனங்கள் ஓட்டும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள்