2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும்.
இந்நிலையில் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளியை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அனைத்து மாவட்டங்களுக்கும் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டன.
அதன்படி தமிழ் மொழி மூலம் பரிட்சைக்கு தோற்றிய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் கேகாலை மாவட்டங்களுக்கு வெட்டுப்புள்ளி 147 ஆகும்.
யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பிறகு 145 என்றும் நுவரெலியா கிளிநொச்சி, திருகோணமலை, பதுளை இரத்தினபுரிக்கு 144 என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் ஹம்பாந்தோட்டை, மன்னார், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வெட்டுப்புள்ளி 143 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.