தியத்தலாவ பகுதியில் ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தியத்தலாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத பாதையில் மண் மற்றும் பாறைகள் வீழ்ந்துள்ளதால் இதர புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
புகையிரத பாதையில் மண் மற்றும் கற்கள் விழுந்துள்ளதை கண்டுகொள்ளாத புகையிரத சாரதி, ரயிலை முன்னோக்கி செலுத்தியதாகவும், அங்கு புகையிரதம் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.