கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 முதல் இரவு 8.30 வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
சப்புகஸ்கந்த மின்சார சபையின் அவசர திருத்தப் பணிகள் காரணமாக, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் தடைப்படுவதால் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.