கல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டடத்தின் தங்கும் அறையில் இருந்தே நேற்றைய தினம் குறித்த சடலம் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர் 22 வயது மதிக்கத்தக்க கோகுலராஜ் சுமன்ராஜ் எனவும் அவரது சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இது குறித்த மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.