ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தெரிவாகியதையொட்டி இந்திய விமானப்படையின் சூர்ய கிரண் அணி வான்வழி காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.
இறுதிப் போட்டி நடைபெறும் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு மேலே இந்த விமானக் காட்சிகள் நடைபெறும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமான கண்காட்சியின் ஒத்திகையை இன்றும் (17) நாளையும் (18) நடத்த இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.
போட்டியை நடத்தும் இந்திய அணிக்கும் பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.