ஜனவரி முதல் முப்பது வகையான பொருட்களுக்கு VAT வரியில் இருந்து விலக்கு அளிக்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
கோதுமை மா, குழந்தைகளுக்கான பால மா, மருந்துகள் மற்றும் மருந்து பொருட்கள், ஆயுர்வேத உபகரணங்கள் மற்றும் பொருட்கள், விவசாய டிராக்டர்கள், உரங்கள், விதைகள் மற்றும் தாவரங்கள், இறால் பண்ணை தீவனங்கள், கால்நடை தீவனங்கள், கோழி தீவனங்கள், ஜவுளி நூல்கள் உட்பட தொழில்துறையில் பயன்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட பொருட்கள். இந்த வழியில் VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 170 வகையான பொருட்களுக்கு VAT விதிக்கப்பட்டு 15வீதமாக உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் VAT வரியை 18வீதமாக அதிகரிக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் மற்றும் மக்களுக்கு சில அத்தியாவசிய பொருட்களுக்கு VAT வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணத்திற்கு VAT அறவிடப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜனவரி மாதம் முதல் எரிபொருள், சுகாதாரம் உள்ளிட்ட பல வகையான பொருட்களுக்கு VAT அறவிடப்படும் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷத சில்வா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால் எரிபொருளுக்கு VAT வரியை விதிக்க முடிவு செய்யவில்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.