2023 ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண போட்டிக்கான அணியில் ஐந்து அணிகளைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
சம்பியன் பட்டம் வென்ற அவுஸ்ரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மற்றும் இலங்கையின் நட்சத்திரங்கள் அதில் இடம்பெற்றுள்ளனர்.
அவுஸ்ரேலியாவின் சகலதுறை வீரரான க்ளென் மேக்ஸ்வெல், சுழற்பந்து வீச்சாளர் அடம் சாம்பா, கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் ஷர்மா மற்றும் மொஹமட் ஷமி என ஆறு இந்திய நட்சத்திரங்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
1. குயின்டன் டி கொக் (விகேட்டகிப்பர்) (தென்னாபிரிக்கா) – 59.40 சராசரியாக 594 ஓட்டங்கள்
2. ரோஹித் சர்மா (அணித்தலைவர்) (இந்தியா) – 54.27 சராசரியாக 597 ஓட்டங்கள்
3. விராட் கோலி (இந்தியா) – 95.62 சராசரியாக 765 ஓட்டங்கள்
4. டேரில் மிட்செல் (நியூசிலாந்து) – 69 சராசரியில் 552 ஓட்டங்கள்
5. கேஎல் ராகுல் (இந்தியா) – 75.33 சராசரியில் 452 ஓட்டங்கள்
6. கிளென் மேக்ஸ்வெல் (அவுஸ்ரேலியா) – 66.66 சராசரியில் 400 ஓட்டங்கள் மற்றும் 55 ஓட்டங்களில் ஆறு விக்கெட்டுகள்
7. ரவீந்திர ஜடேஜா (இந்தியா) – 120 ஓட்டங்கள் 40 மற்றும் 16 விக்கெட்டுகள்
8. ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) – 18.65 சராசரியில் 20 விக்கெட்டுகள்
9. டில்ஷான் மதுஷங்க (இலங்கை) – 25 ஓட்டங்களில் 21 விக்கெட்டுகள்
10. அடம் சாம்பா (அவுஸ்ரேலியா) – 23 விக்கெட்டுகள்
11. மொஹமட் ஷமி (இந்தியா) – 24 விக்கெட்டுகள்
12. ஜெரால்ட் கோட்ஸி (தென்னாப்பிரிக்கா) – 20 விக்கெட்டுகள்
இந்த தெரிவில் இயன் பிஷப், காஸ் நைடூ, ஷேன் வொட்சன், வசிம் கான் மற்றும் சுனில் வைத்யா ஆகியோர் இருந்ததாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.