புதிய அரசாங்கத் திட்டங்களின் கீழ் வேல்ஸில் உள்ள பாடசாலைகளுக்கு கோடை விடுமுறைகள் ஒரு வாரங்களாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மாற்றம் பின்தங்கிய மாணவர்களுக்கு பயனளிக்கும் என்றும் மாணவர்கள் மற்றும் கல்வி ஊழியர்களின் நல்வாழ்வை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த மாற்றங்கள் மாணவர்களின் கல்விக்கு உதவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ஒரு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வசந்த காலத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் 2025 மற்றும் 26 ஆம் கல்வியாண்டில் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு வழங்கப்படும் பாடசாலை விடுமுறைகளின் எண்ணிக்கை மாறாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.