பால்க்லாந்து தீவை திரும்பப் பெறுவோம் என அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் அது பிரித்தானியாவிற்குரியவை என ரிஷி சுனக்கின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினாவின் ஜனாதிபதித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேவியர் மிலே, பால்க்லாந்து மீது தமக்கு இறையாண்மை உள்ளதாக தெரிவித்துள்ளார்
ஆகவே அதனை அடைவதற்காக இராஜதந்திர வழிகள் மூலம் தனது அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் அர்ஜென்டின ஜனாதிபதி கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் பால்க்லாந்து தீவுகளின் இறையாண்மை குறித்து பிரித்தானியாவிற்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் அங்குள்ளவர்கள் சுயநிர்ணய உரிமையை அரசாங்கம் பாதுகாக்கும் என்றும் ரிஷி சுனக்கின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பால்க்லாந்து தீவுகள், தென் அட்லாண்டிக் கப்பல் வழித்தடங்கள் மற்றும் சரக்கு, டிரைலர்கள் மற்றும் பிற கடல் போக்குவரத்தின் முக்கிய பகுதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.