வட்டுக்கோட்டை பொலிஸாரினால் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சரவணபவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” ”நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞன் பொலிஸாரின் காவலில் இருந்த போது சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்”வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் அவர்கள் நால்வரும் தற்பொழுது மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்வாங்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும்” யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யாழ்.மாநகரின் முன்னாள் மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் அறிக்கையொன்றை வெளியிட்டு, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.