செப்ரெம்பர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவாக 8 ஆயிரத்து 571 மில்லியன் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனை வலியுறுத்தினார்.
13 லட்சத்து 77 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பணம் நாளை முதல் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான பரிசீலனைகள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர், தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
கடந்த ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவு முதல் அவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.