இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரரும் டெஸ்ட் அணியின் தலைவருமான பென் ஸ்டோக்ஸ், எதிர்வரும் ஐ.பி.எல். ரி-20 தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்றதற்கு பிறகு இந்தியாவில் நடந்து முடிந்த உலகக் கிண்ணத் தொடரில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ், தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், இந்த தீர்மானத்தை அவர் எடுத்துள்ளார்.
இங்கிலாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக அவரது இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து குணமடைவார் என்ற போதிலும், தனது பணிச்சுமை மற்றும் உடற்தகுதியை நிர்வகிப்பதற்காக அவர் ஐ.பி.எல். தொடரில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் உறுதிசெய்துள்ளது.
கடந்த ஆண்டு ஏலத்தில் இந்திய மதிப்பில் 16.25 கோடி ரூபாய்க்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், கடந்த தொடரிலும் முழுமையாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.