டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்று, செர்பியா மற்றும் இத்தாலி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இத்தாலி மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய காலிறுதிப் போட்டியில், இத்தாலி அணி 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இதேபோல, செர்பியா மற்றும் பிரித்தானியா அணிகள் மோதிய போட்டியில், செர்பியா அணி 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
இதன்படி, எதிர்வரும் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இத்தாலி அணியும் செர்பியா அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
முதலாவது அரையிறுதிப் போட்டியில், பின்லாந்து அணியும் அவுஸ்ரேலியா அணியும் மோதவுள்ளன.