12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட அனைத்து சிறுமிகளுக்கும் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட வேண்டுமென பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று (27) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். இந்த வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சின் ஊடாக மேற்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் யோசனை முன்வைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதான கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளித்து அடுத்த வருடம் முதல் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.
அதனடிப்படையில் 03 இலட்சம் பாடசாலை மாணவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு எதிர்காலத்தில் படிப்படியாக அதிகரித்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.