ஆயுதமேந்தியவர்கள் சிறைக்குள் புகுந்து கைதிகளை விடுவித்ததை அடுத்து, சியரா லியோனில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வசிப்பவர்கள் வீட்டிற்குள் இருக்க ‘கடுமையாக’ பரிந்துரைக்கப்படுகிறார்கள் மற்றும் நாட்டின் ஒரே சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மேற்கு ஆபிரிக்க நாட்டின் தகவல் அமைச்சர் ஜூலியஸ் மாடா பயோ கூறுகையில், ‘பல சிறைகளில் இருந்து கைதிகள் ஞாயிற்றுக்கிழமை காலை விடுவிக்கப்பட்டனர். தாக்குதலுக்குப் பின்னால் இருந்த பெரும்பாலான தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வுகள் ‘பாதுகாப்பு மீறல்’ மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். தற்போது அமைதி திரும்பியுள்ளது. ஆனால் குற்றவாளிகள் யார் அல்லது அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை’ என அவர் கூறினார்.