வெளிநாட்டு வேலைவாய்ப்பு என பிரதமரின் பெயரை கூறி பணம்பறிக்கும் குழு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடளுமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன இந்த சம்பவதிற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “நான் ஒரு விடயத்தை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். டென்மார்க்கில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி இந்த நாட்டு இளைஞர்களிடம் தலா 6 லட்சம் ரூபாய் வசூலிக்கும் செயற்பாட்டில் உங்களது ஒருங்கிணைப்பு அதிகாரி என்று கூறிக் கொள்ளும் ஒரு குறிப்பிட்ட நபரும் குழுவும் நடத்தி வருகின்றனர். இது குறித்து முறையான விசாரணை வேண்டும்.”
பிரதமர் தினேஷ் குணவர்தன “இந்தக் கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் கேட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் நான் ஒருபோதும் ஈடுபடவில்லை. மேலும் எனது நிறுவனம் இதில் ஈடுபடவில்லை. இந்த விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நம் நாட்டில் பல்வேறு நபர்களின் பெயர்களை வைத்து இவ்வாறு கடத்தல் நடக்கிறது. இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.”