ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் செல்லவிருந்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் அந்த விஜயத்தை இரத்து செய்துள்ளார்.
காய்ச்சல் மற்றும் நுரையீரல் பதிப்பில் இருந்து மீண்டு வரும் பாப்பரசர் மருத்துவர்களின் உத்தரவின் பேரில் ஓய்வு பெறுவதால் இந்த விஜயத்தை இரத்து செய்துள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
86 வயதான பாப்பரசர் பிரான்சிஸ், எதிர்வரும் சனிக்கிழமை டுபாயில் நடைபெறும் கட்சிகளின் மாநாட்டில் உரையாற்றுவதற்காக வெள்ளிக்கிழமை புறப்படவிருந்தார்.
அவ்வாறு சென்றிருந்தால் ஐ.நா காலநிலை மாநாட்டில் உரையாற்றிய முதல் பாப்பரசர் என்ற பெருமையை அவர் பெற்றிருப்பார்.
இதேநேரம் காய்ச்சல் மற்றும் சுவாசக் குழாய் பிரச்சினையால பாதிக்கப்பட்ட பாப்பரசரது உடல்நிலை மேம்பட்டு வருவதாக வத்திக்கான் பேச்சாளர் கூறியுள்ளார்.