காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் தொடர வேண்டும் என போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
போர்நிறுத்தம் தொடர்ந்தால் பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தேவையான மனிதாபிமான உதவிகள் மக்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனதிற்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம் என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.