நாட்டில் போதைப்பொருள் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதே தனது முதல்கட்ட நடவடிக்கையாக அமையுமென பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் 25 வருடகாலமாக பொலிஸ் சேவையில் பல பதவிகளில் இருந்துள்ளேன்.
எமக்குள்ள அனுபவத்தையும் சிரேஷ்ட அதிகாரிகளின் அனுபவத்தையும் நாட்டு மக்களின் நலனுக்காக பொலிஸ் சேவையை சிறப்பாக முன்னெடுப்பதே எனது எதிர்ப்பார்ப்பாகும்.
தேசிய பாதுகாப்பு தான் எனது முதன் நோக்கமாக உள்ளது. இரண்டாவதாக நாட்டிலிருந்து போதைப்பொருளை கட்டுப்படுத்த வேண்டும்.
சிறைச்சாலைகள், பாடசாலைகள் முதற்கொண்டு அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் பிரச்சினை காணப்படுகிறது.
இதனைக் கட்டுப்படுத்த என்னிடம் விசேட வேலைத்திட்டமொன்றும் உள்ளது.
மேலும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவும் நாம் நடவடிக்கை எடுப்போம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.