பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட தீர்மானித்துள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் வருடாந்தம் ஏற்படும் 75,000 புகையிலை தொடர்பான மரணங்களைத் தடுப்பதற்காக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிகரெட்டின் விலையும் படிப்படியாக அதிகரிக்கப்படும் என பிரான்ஸ் சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
பிரான்சில் கடற்கரைகள், பொது பூங்காக்கள், காடுகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பல பொது இடங்களில் விரைவில் புகைபிடித்தல் தடை செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.