நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (29) மாலை மூன்று மாவட்டங்களில் உள்ள 27 பிராந்திய செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை ஹாலிஎல மற்றும் பசறை பிரதேச செயலகப் பிரிவுகளும், கேகாலை மாவட்டத்தில் கேகாலை, அரநாயக்க, மாவனெல்ல, ருவன்வெல்ல, வரகாபொல, கலிகமுவ, யட்டியந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் , இரத்னபுரி மாவட்டத்தின் நிவித்திகல, கஹவத்தை, கிடாங்கம, தியாயகம, தியாகம செயலகப் பிரிவுகளுக்கான முதல் நிலை அறிவிப்பும், கலவான, இரத்தினபுரி, குருவிட்ட, அஹெலியகொட, அலபாத, கொடகவெல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான இரண்டாம் நிலை அறிவிப்பும் வெலிகேபொல கொலன்னாவை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான மூன்றாம் நிலை சிவப்பு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளன.