ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (Cop 28)) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி புறப்பட உள்ளார்.
இதன் போது மூன்றாம் உலக நாடுகளுக்கான காலநிலை நீதிமன்றத்தை நிறுவுதல் மற்றும் வெப்பமண்டல மன்றத்தை நிறுவுதல் ஆகிய முன்மொழிவுகளையும் ஜனாதிபதி அங்கு முன்வைக்க உள்ளமை குறிப்பித்தக்கது