கடந்த மே மாதம், வாட்ஸ்அப் சாட் லாக் வசதியை அறிமுகப்படுத்தியது.
இது பயனர்கள் தங்கள் சாட்களை கடவுச்சொல் அல்லது கைரேகை மூலம் பாதுகாக்க அனுமதிக்கிறது.
இந்த அம்சம் “லாக் செய்யப்பட்ட சாட்” கோப்புறையில் கிடைக்கிறது.
கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் வகையில், வாட்ஸ்அப் சாட் லாக்கிற்கு “ரகசிய குறியீடு” என்ற புதிய அம்சத்தை அறிவித்துள்ளது.
இது எதிர்வரும் மாதங்களில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.