நாட்டில் குழந்தைப்பேறுகள் குறைவடைந்துள்ளமையினால் 5 வயதை கடந்த குழந்தைகளை பாடசாலையில் சேர்க்கும் எண்ணைக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
தற்போது சுமார் 292,000 குழந்தைகள் பாடசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பத்து வருடங்களுக்கு முன்னர் 340,000 பிள்ளைகள் பாடசாலைகளில் சேர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சின் செலவு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.