ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அமைப்பினருக்கு இடையே ஏற்ப்பட்ட மோதலில் இருநாட்டிலும் பணயக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் 7 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன் போது ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளை விடுவிக்க ஆரம்பித்தனர். ஒரு கைதிக்கு மூன்று பணயக்கைதிகள் என்ற ரீதியில் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஹமாஸினால் விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் தொடர்பாக கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், இவ்விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு , பெண்கள் அமைப்பு, ஐ.நா சபை போன்ற அமைப்புகள் பேச தவறியமைக்கு கடும் கண்டனம் தெரவித்துள்ளார்.
அவர்கள் இந்நிலையில் இருக்கும் போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அனைத்து நாட்டு தலைவர்களும் அது தொடர்பாக குரல் கொடுக்க வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.