வடக்கு யேமனில் உள்ள ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உணவு விநியோகத்தை இடைநிறுத்துவதாகக் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நிதியில் வீழ்ச்சி மற்றும் அங்குள்ள ஏழைகள் மீது எவ்வாறு கவனம் செலுத்துவது என்பதில் குழுவுடன் கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நன்கொடையாளர்களுடனான ஆலோசனைகள் மற்றும் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, உதவி தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கையை 9.5 மில்லியனில் இருந்து 6.5 மில்லியனாகக் குறைப்பது குறித்த உடன்பாட்டுக்கு வரவில்லை என உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.
அரேபிய தீபகற்பத்தில் உள்ள ஏழ்மையான நாடான யேமனில், 2014இல் தலைநகர் சனாவையும் பெரும் நிலப்பரப்பையும் கைப்பற்றிய சவூதி ஆதரவு அரசாங்கத்திற்கும் ஈரானுடன் இணைந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் யேமன் போர் வெடித்ததில் இருந்து உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றை அந்நாடு எதிர்கொண்டது.
ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உணவு இருப்புக்கள் இப்போது முற்றிலும் தீர்ந்துவிட்டதாகவும் உணவு உதவியை மீண்டும் தொடங்குவது குறித்த உடன்படிக்கையை மீண்டும் தொடங்குவதற்கு நான்கு மாதங்கள் வரை ஆகலாம் என ஐக்கிய நாடுகளின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊட்டச்சத்து மற்றும் பாடசாலை உணவுத் திட்டங்களை முகவரத்துக்கு போதுமான நிதி மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும் வரை சனாவில் மேற்கொள்ளலாம் என உலக உணவு திட்டம் கூறியது. முகவரகத்தின முடிவு குறித்து ஹூதி அதிகாரிகள் உடனடி கருத்தை வெளியிடவில்லை.