ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் பள்ளிவாசல் மற்றும் மத்ரஸாக்களை புதிதாக பதிவு செய்ய முடியவில்லை எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்துதருமாறும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ் தௌபீக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சு, புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எம். எஸ் தௌபீக் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.
யுத்தம் நிறைவடைந்து நீண்டகாலமாகியும் காணிப்பிரச்சினைகள் இதுவரையில் தீர்க்கப்படவில்லை என்றும் இது தொடர்ப்பில் பல சந்தப்பங்களில் பேசியும் உரிய அதிகாரிகளை சந்தித்தும் எந்த முடிவும் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிண்ணியா கல்லறிப்பு காணி, உப்பாறு தளவா காணிகள், குச்சவெளி ஆலம்குளம், புல்மோட்டை மற்றும் ஏனைய உரியர்களுக்கு வழங்க நடடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருகோணமலை மாவட்டத்தில் பிரதேசங்களுக்கான எல்லைகள் நிர்ணயிக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்..
திருகோணமலை மாவட்டமானது சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற மாவட்டம் என்பதால் அதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கோள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ் தௌபீக் கேட்டுக்கொண்டுள்ளார்.