காசாவில் மனிதாபிமான உதவிகள் வீழ்ச்சியடையக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடாத்தி வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மக்கள் ஏனைய நாடுகளுக்கு பாதுகாப்பு கோரி செல்வதும் தற்போது அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.