மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்தது.
ஆன்டிகுவா- சர்.விவியன் ரிச்சட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 39.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சாய் ஹோப் 68 ஓட்டங்களையும் ஷெர்பேன் ருத்தர்போர்ட் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சேம் கர்ரன் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுளையும் கஸ் அட்கின்சன் மற்றும் ரெஹன் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 203 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 32.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வில் ஜெக்ஸ் 73 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகளையும் ரொமாரியோ செப்பர்ட் மற்றும் ஷெர்பேன் ருத்தர்போர்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், 3 விக்கெட்டுளை வீழ்த்திய சேம் கர்ரன் தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, நாளை மறுதினம் பார்படோஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.