சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி வைத்தியசாலையில் இருந்து மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் 12 ஆம் திகதி சென்னை ஓமந்தூரார் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட விசேட வைத்தியர்கள் குழு, தேவையான சிகிச்சைகளை வழங்கி வந்த நிலையில், இன்று காலை வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் இருந்து புழல் சிறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்பட்டார்.