யாழில் 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை சிறப்பிக்கும் விதமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய காரியாலயமானது “Dignity, Freedom, and Justice for All” எனும் தொனிப்பொருளில் நிகழ்ச்சியொன்றை நடத்தவுள்ளது.
குறித்த நிகழ்ச்சியானது எதிர்வரும் புதன்கிழமை மு.ப 09.45 மணியிலிருந்து நண்பகல் 12.00 மணிவரை யாழ்ப்பாணம் டேவிட் வீதியில் உள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடத்தப்படவுள்ளது.
குறித்த நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள மனித உரிமை பாதுகாவலர்களுக்கான வழிகாட்டல்கள் தொடர்பில் (Guideline of Human Rights Defenders) கலந்துரையாடலும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.