உக்ரைனின் ஐரோப்பிய ஒன்றிய அபிலாஷைகளைத் தடுக்க அச்சுறுத்தும் ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பனை, உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவான நேற்றே (ஞாயிற்றுக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கான உக்ரையின் விண்ணப்பத்தை ஓர்பன் கடுமையாக எதிர்த்தார். இதனால், இந்த வாரத்தின் பிற்பகுதியில் இராஜதந்திர தோல்வி ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஜனாதிபதி ஸெலென்ஸ்கிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘டீயுனு டீழுலு’ என்று பரவலாகக் கருதப்படும் ஹங்கேரிக்கும், உக்ரைனுக்கும் இடையில் என்ன பேசப்பட்டது என்பதை புரிந்து கொள்வது கடுமையானதாக இருந்தால் கூட, உக்ரைனின் போர் முயற்சிக்கு இந்த வாரம் மிக முக்கியமான வாரமாக இருக்கக்கூடும்.
அமெரிக்க பாதுகாப்பு உதவி தொகுப்பை மீட்பதற்காக, உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி நாளை (செவ்வாய்க்கிழமை) வொஷிங்டனுக்கு செல்லவுள்ளார். இது 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானதாகும்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சட்டமியற்றுபவர்களை நிதிக்கு ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்துகிறார், ஆனால் இந்த உதவி உள்நாட்டு, பாகுபாடான அரசியலில் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.