சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னாரில் இன்று(11) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் அருந்தவநாதன் நிரோஜன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்” மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற அரச காணிகள் கொள்ளை தொடர்பாக நீதியை பெற்றுத் தாருங்கள், பணக்காரர்களுக்காக தாரை வார்க்கப்படும் மேய்ச்சல் தரைகள், கடற்கரையோரம், காட்டு நிலங்கள் தடுத்து நிறுத்துங்கள்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.















