இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாக இந்திய தூதுவருக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று சபையில் கேள்வியெழுப்பியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது குறித்து எனக்கு பொறுப்பு தந்துள்ளார்.
இந்நிலையில், உங்களையும் இணைத்துக்கொண்டு இந்திய உயர்ஸ்தானிகரை சந்துத்து கலந்தரையாடுவதற்கும், அதேநேரம், வெளிவிவகார அமைச்சுடன் கலந்தரையாடுவதற்கும் நாங்கள் தினம் ஒன்றை தீர்மானித்திருந்தோம்.
ஆனால், இந்திய உயர்ஸ்தானிகரின் மாற்றம் காரணமாக, அந்த திகதியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டி ஏற்பட்டது.
எங்களுடைய மீனவர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் எங்களுக்குத் தெரியும். அந்தப் பிரச்சினைகளுக்கு உங்களுடன் இணைந்து சென்று தீர்வு காணுவது குறித்து நாங்கள் கலந்துரையாடியுள்ளோம்.
ஏனென்றால், இந்த விடயத்தைப் பயன்படுத்தி சிலர் அரசியல் இலாபம் காண முயல்கின்றனர்.
ஆனால், அதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.