யாழில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இரவு வேளைகளில் வீதிகளில் பயணிப்பவர்களைக் குறிவைத்தும், இருள் சூழ்ந்து காணப்படும் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களைக் குறிவைத்தும் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது இரவு வேளைகளில் வீதியில் கூடும் விஷமிகள் குழுவினர் மதுஅருந்திவிட்டு வீதியில் செல்வோர் மீது மோதலில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களும், வர்த்தகர்களும் மிகுந்த அச்சத்துடன் தமது அன்றாட வாழ்க்கையை கழித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் மற்றும் யாழ் மாநகர சபை கவனம் செலுத்தி மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.















