• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆதவனின் ஜோதிடம்
வாகனங்களில் மிக கவனமாக செல்ல வேண்டிய ராசிக்காரர்

வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும்.

Kavipriya S by Kavipriya S
2023/12/12
in ஆதவனின் ஜோதிடம், ஆன்மீகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

மேஷம்

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும். வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அவசியத் தேவை என்றாலும்கூட கடன் வாங்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும்.

ரிஷபம்

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். உடல் ஆரோக்கியத் தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். விற்பனை யும் அதிகரிக்கும். இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

மிதுனம்

எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். கடன் பிரச்னைகள் சுமுகமாக முடியும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக் கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

கடகம்

உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரி களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியா கும். நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் திடீர் செலவுகளும், பணி யாளர்களால் வீண் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப் பார்கள். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்

முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். இன்று விநாயகர் வழிபாடு நன்று.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

கன்னி

தேவையான பணம் கிடைக்கும். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப் பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மகா விஷ்ணு வழிபடுவது நலம் சேர்க்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளைய சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித் துச் செல்வது நல்லது. சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும். தக்க முன்னெச்ச ரிக்கை அவசியம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்ப டும். இன்று சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் குறையும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்

சகோதர வகையில் எதிர்பார்த்து இழுபறியாக இருந்த காரியம் அனு கூலமாக முடியும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். ஷண்முகக்கடவுள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

தனுசு

குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறை வேற்றுவீர்கள்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியா பாரிகளால் அனுகூலம் உண்டாகும். இன்று மகாலட்சுமியை வழிபடுவது மிகச் சிறப்பு.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.

மகரம்

தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் செயல்படுவீர்கள். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச் சியே உண்டாகும். சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் அதிகரிக்கும். அம்பிகையை வழிபடுவது நலம் சேர்க்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

கும்பம்

இன்று நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி சாதகமாக முடிவதுடன், அத னால் எதிர்பார்த்த ஆதாயமும் கூடுதலாகக் கிடைக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். இன்று நீங்கள் விநாயகரை வழிபடுவது நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

மீனம்

காரியங்கள் அனுகூலமாக முடியும். அதிகப்படியான செலவுகள் ஏற்பட்டா லும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் மூலம் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாப மும் அதிகரிக்கும். இன்று காலபைரவரை வழிபடுவது நன்று.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

Related

Tags: ஆதவனின் ஜோதிடம்ஜோதிடம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பரந்த அளவிலான பரிந்துரைகளை வழங்கியது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு !

Next Post

யாழில். ஊடகவியலாளரின் வீடு புகுந்து கொலை அச்சுறுத்தல்

Related Posts

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!
இலங்கை

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!
இலங்கை

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026-01-24
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
இலங்கை

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!
இலங்கை

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

2026-01-24
இன்றும் தொடரும் அரச வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு!
இலங்கை

இன்றும் தொடரும் அரச வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு!

2026-01-24
ஆறாம் ஆண்டிற்கான புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
இலங்கை

ஆறாம் ஆண்டிற்கான புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

2026-01-24
Next Post
யாழில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்!

யாழில். ஊடகவியலாளரின் வீடு புகுந்து கொலை அச்சுறுத்தல்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று!!

தமிழகத்துடன் பேச்சு நடத்த வேண்டும் - அமைச்சர் டக்ளஸ்

சீனாவின் தாமதத்தால் இலங்கைக்கு IMF உதவி கிடைக்காமல் போகும் அபாயம்

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான கலந்துரையாடல்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

0
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.