யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்கள் காரணமாக பல கப்பல் நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் செங்கடலில் கப்பல் வர்த்தகத்தைப் பாதுகாக்க ஒரு பன்னாட்டுப் படையைத் தொடங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, சீஷெல்ஸ் மற்றும் பிரித்தானியா என 10 நாடுகள் இதில் இணையும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் கூறியுள்ளார்.
காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் அல்லது இஸ்ரேலியர்களுடன் தொடர்புடைய கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.