இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய இராணுவக் கூட்டணியொன்றை அமெரிக்கா அறிவித்துள்ளது.
‘Operation: Guardians of Prosperity’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த திட்டத்தில் பஹ்ரைன், கனடா,பிரான்ஸ்,இத்தாலி,நெதர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் குறித்த கூட்டணியில் இணைய மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.