தமிழகத்தில் பெய்து வரும் கனமழைகாரணமாக நெல்லை , தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நெல்லையில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் உடல் மிதந்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து குறித்த சடலத்தை மீட்புப் படையினர் மீட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர் யார் என்பதைக் கண்டறிய பொதுமக்கள் உதவிசெய்ய வேண்டுமென பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
















