அஞ்சல் சேவை ஊடாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் அநுராதபுரம் – ரம்பேவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் மருத்துவ பீடத்தில் மூன்றாம் ஆண்டில் பயிலும் குறித்த மாணவரிடம் இருந்து 11 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , மாணவன் தங்கி இருந்த அறையை சோதனையிட்ட போது, போதை மாத்திரைகள், தடை செய்யப்பட்ட லேகியப் பொதிகள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து மாணவனை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனார்.