மாத்தறை சிறைச்சாலையில் கைதியொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நோய் நோய் தொற்றுக்கு இலக்காகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கைதி மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை மேலும் 8 சிறைக்கைதிகள் அதே அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.