2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து வௌிநாடுகளுக்குப் படிக்கச் சென்ற 403 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.
இந்திய மாணவர்கள் அதிகம் இருக்கும் 34 நாடுகளை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஆய்விலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அறிக்கையின் படி ” கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இயற்கையான காரணங்கள், தற்கொலைகள் மற்றும் விபத்துக்கள் உள்ளிட்ட பல காரணங்களால் குறைந்தது 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அந்தவகையில் 2018-ஆம் ஆண்டு முதல் கனடாவில் 91 பேரும்,இங்கிலாந்தில் 48 பேரும் , ரஷ்யாவில் 40 பேரும், அமெரிக்காவில் 36பேரும், அவுஸ்திரேலியாவில் 35 பேரும், உக்ரேனில் 21பேரும், ஜெர்மனியில் 20 பேரும் , சைப்ரஸில் 14பேரும் , இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் தலா 10 பேரும் உயிரிழந்துள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சர் முரளிதரன், ”வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் மத்திய அரசு தொடர்ந்து தீவிரமாக செயற்பட்டு வருகின்றது” இவ்வாறு தெரிவித்தார்.