கிறிஸ்மஸ் பண்டிகை தினமான இன்று(25) மலையகத்திலுள்ள கிறிஸ்த்தவர்கள் வெகுவிமர்சையாக கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில் மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் விசேட ஆராதனைகள் இயேசு, கலை விழாகள் என இடம்பெற்று வருகின்றன.
ஹட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை நியூமன் பீரிஸினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.