“மலர்ந்திருக்கும் புதிய ஆண்டை மலையகத்தமிழரின் இன அடையாளத்தை வென்றெடுக்கும் ஆண்டாக மாற்றிக்கொள்வோம்” என மஸ்கெலியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ”2024 ஆம் ஆண்டில் மலையக சமூகத்தின் பிரச்சினை தீர்க்கப்பட்டு பொருளாதார ரீதியில் சுபீட்சமான ஆண்டாக அமைய வேண்டும். எமது சமூக, கலாச்சார விழுமியங்களோடு புத்தாண்டை வரவேற்று இந்த ஆண்டில் நிரந்தரமான எமது உரிமைகளையும், அடையாளங்களையும் உறுதிப்படுத்திக்கொள்வோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.