இன்று முதல் (01) அமுலுக்கு வரும் வகையில் மதுபானம் மற்றும் சிகரெட்டின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
புதிய வெட் வரி திருத்தத்திற்கு அமைவாக இவ் விலை அதிகரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு,சிகரெட்டின் விலை 5 தொடக்கம் 25 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.