நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஆயிரத்து 229 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 40 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், 86 சந்தேக நபர்கள் விளக்கமறியல் உத்தரவின் கீழ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சந்தேக நபர்கள் பட்டியலில் உள்ள 100 சந்தேக நபர்களும் கைதானவர்களில் அடங்குகின்றனர்.
இந்நிலையில், 440 கிராம் ஹெரோயின், 260 கிராம் ஐஸ், 15 கிலோ 300 கிராம் கஞ்சா, 3 ஆயிரத்து 948 கஞ்சா செடிகள், ஒரு கிலோ 300 கிராம் மாவா மற்றும் 417 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியிலான இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களுக்கும் தொடரும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.