தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியாங் (Lee Jae-myung) மீது கத்திக் குத்துத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூசன் நகரில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மர்ம நபரொருவரால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தாக்குதலினால் படுகாயமடைந்த எதிர்க் கட்சித்தலைவர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலை தற்போது கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தாக்குதலை மேற்கொண்ட குற்றச் சாட்டில் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வலுவான பங்கு வகித்த லீ ஜே மியாங் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.